

சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற் றியதற்கு பார் கவுன்சில் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் எஸ்.ரஜினிகாந்த்:
சென்னை தவிர மற்ற மாநிலங் களில் அந்தந்த மாநிலங்களின் பெயர்களில்தான் உயர் நீதி மன்றம் அழைக்கப்படுகிறது. அதுபோல சென்னை உயர் நீதிமன்றத்தையும் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்புக்குரியது.
வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்தில் தமிழக அரசுக்கும் பங்கு உள்ளது. அந்த சட்டத் திருத்தத்தை அரசிதழில் வெளி யிட்டது தமிழக அரசுதான். எனவே வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்பாகவும் தமிழக அரசு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் எஸ்.அறிவழகன்:
ஏற்கெனவே வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தால் மனதளவில் வெந்து போயிருக்கும் வழக்கறி ஞர்களுக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. இதை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மனதார வரவேற்கிறது. இந்த தீர்மானத்தை ஏற்று, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கு.பகவத்சிங்:
தமிழை வழக்காடு மொழியாக் கக்கோரி முதன்முதலில் மதுரை யில் போராட்டத்தை முன்னெடுத்த போது அப்போதே தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றக் கோரியும் போராடினோம்.
ஒட்டுமொத்த தமிழக வழக்கறிஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற தமிழக முதல்வர் வலியுறுத்தியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி முதன்முதலில் அதிமுக அரசுதான் கடந்த 2002-ல் முதன்முதலாக குரல் கொடுத்தது. தமிழை வழக்காடு மொழியாகவும் அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் கோ.பாவேந்தன்:
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை. தமிழுக்காக போராடிய, போராடிக் கொண்டு இருக் கும் வழக்கறிஞர்கள், பிற வழக்கறிஞர்களுக்கு முதல்வ ரின் இந்த தீர்மானம் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரின் இந்த அறிவிப்பு தீர்மானத்தோடு நின்றுவிடாமல், அதை செயல் படுத்தும் வரை ஓயக்கூடாது. அதுபோல தமிழை வழக்காடு மொழியாக்குவதும் முதல்வர் கையில்தான் உள்ளது.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்:
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இதை மனதார வரவேற்று, முதல்வருக்கு நன்றியு டன் பாராட்டையும் தெரிவிக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலப் பெயர்க ளில் அழைக்கப்படும்போது, சென்னை உயர் நீதிமன்றமும் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என அழைக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழை நேசிக்கும் தமிழர்கள், ஒட்டுமொத்த வழக்கறிஞர்களின் விருப்பமும் அதுதான்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க தமிழக முதல்வர் உறுதிபூண்டுள்ளார். அதுவும் நிச்சயம் நடக்கும். வழக்கறிஞர் சேமநலநிதியை ரூ.2 லட்சத் தில் இருந்து ரூ.5.25 லட்சமாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த தொகையை ரூ.7 லட்சமாக உயர்த்தவும் விரைவில் அறிவிப்பு வெளியி டுவார் என நம்புகிறோம்.