Published : 05 Feb 2017 10:49 AM
Last Updated : 05 Feb 2017 10:49 AM

செங்கல்லாற்றில் கேரள அரசை அணை கட்ட விடக்கூடாது: அமராவதி நீர்த்தேக்க பாசன விவசாயிகள் கோரிக்கை

பாம்பாற்றின் துணை நதியான செங்கல்லாற்றில் பட்டிச்சேரியில் கேரள மாநில அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என அமராவதி நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல்வர் ஓ.பன் னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆகி யோரைச் சந்தித்து மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் ஆகி யோரிடம் அளித்த மனு விவரம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் உள்ள அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கனஅடி. அணையின் முக்கிய நீர் வரத்தாக கேரளாவின் பாம்பாறு உள்ளது. பாம்பாற்றின் துணை ஆறுகள் அனைத்தும் கேரளாவில் உற்பத்தி யாகி அமராவதி அணையை வந்தடைகின்றன. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமராவதி அணையின் புதிய மற்றும் பழைய பாசனப் பகுதிகளில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், வழிநெடுகிலும் நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கு கிறது. இப்பாசனப் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் பயிர் செய்யப்படுகின்றன. இந்நிலையில், கேரள மாநில அரசு செங்கல்லாறு, தலையாறு மற்றும் வட்டவடா என்று 3 ஆறுகளில் புதிய அணைகள் கட்டும் திட்டம் தயாரித்து தற்போது செங்கல்லாற்றில் பட்டிச்சேரியில் ரூ.23 கோடியில் அணை கட்டும் பணியைத் தொடங்கி உள்ளது.

இதனால், அமராவதி அணைக்கு நீர் ஆதாரமான பாம்பாறு நீர்வரத்து குறைக்கப்பட்டு அமராவதி அணைக்கு வரும் நீர் ஆதாரம் முறைகேடாக தடுக்கப்படுகிறது. அமராவதி நதி நீரை நம்பியுள்ள 55,000 ஏக்கர் பாசன பகுதிகள், கிராம குடிநீர் திட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்படும்.

இதனால் திருப்பூர், கரூர் மாவட் டங்களின் வேளாண் உற்பத்தி, பால் உற்பத்தி, குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். மேலும், தமிழக விதை தேவையான 85,000 மெட்ரிக் டன் அளவில் 50 சதவீதம் நெல் உற்பத்தியை பங்களிப்பாக வழங் கும் திருப்பூர் மாவட்ட விதை நெல் உற்பத்தி பெருமளவு பாதிக் கப்படும். மேலும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதைச் சார்ந்துள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதார மும், சர்க்கரை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு கேரள அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

மேலும், இதுகுறித்து கடந்த 2014 நவம்பரில் தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள அணை கட்டு வதற்கு தடை கோரும் மனு மீது விரைவான நடவடிக்கைக்கு ஆவன செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் குளத்துப்பாளை யம் கே.கே.விஸ்வநாதன் கூறிய போது, “பாம்பாற்றின் துணை நதி யான செங்கல்லாற்றில் பட்டிச்சேரி என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட்டால் அமராவதி பாசனம் மற்றம் குடிநீர் ஆதாரங்கள் கடுமை யாக பாதிக்கப்படும். எனவே, அணை கட்டுவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அமரா வதி பாசன சங்கங்கள், நெல் விதை உற்பத்தி சங்க மாநில செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட பல்வேறு நிர் வாகிகள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசி கலா ஆகியோரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x