டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Updated on
1 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக் காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகிக்கப்படுவதாக அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பு மீது திமுகவினரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியி னரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில், தேர்தல் ஆணையம் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றிய காவல், வருவாய், உள்ளாட்சித் துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்றி வருகிறது. இதுதவிர வருமானவரித் துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தண்டையார் பேட்டையில் உள்ள தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர்.

தண்டையார்பேட்டை தண் டையார் நகர் 5- வது தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். மீனவர் கூட்டுறவு நலச்சங்க தலைவராக உள்ளார். தினகரன் ஆதரவாளரான இவர், பூத் கமிட்டி உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். முதல் தளத்தில் உள்ள வீட்டை ராமச்சந்திரன் திறக்காததால், அதற்கு சீல் வைத்தனர். ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவிக்கவே சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்தினர்.

தகவல் வெளியிடவில்லை

அதிகாலை 2 மணி வரை நடந்த சோதனையில், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனையில் சிக்கிய மற்ற பொருட்கள், ஆவணங்கள் தொடர்பான எந்த தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை.

இத தொடர்பாக ராமச் சந்திரன் கூறும்போது, ‘‘எதிரணி, எதிர்க்கட்சி தூண்டுதலால், தவறான தகவல் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி யுள்ளதாக அறிகிறேன்’’ என்றார். தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in