

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி எழுதிய ‘மண்ணும், மழை நீரும்’ என்ற நூலுக்கான பரிசு, இன்று (ஏப்.28) சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படு கிறது என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விஜயராகவன் தெரிவித்தார்.
தமிழ் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத் துறை சார்பில் பாவேந் தர் பாரதிதாசனின் 126-வது ஆண்டு பிறந்த நாள் அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜயராகவன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் கூடத்துக்கு முன்பு தமிழ்த் தாய் ஊடக அரங்கு அமைக் கப்பட்டுள்ளது. அதில், பழந்தமிழர் வாழ்வியல், நீர் மேலாண்மை, வேளாண்மை, போர் முறை உள் ளிட்டவை திரையில் காட்சிப்படுத் தப்படுகின்றன. சீன மொழியில் திருக்குறளும், அரபு மொழியில் பாரதியார், பாரதிதாசன் கவிதை களும் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. அடுத்து, கொரிய மொழி யில் திருக்குறள் மொழிபெயர்க் கப்பட்டு, அச்சிட்டு தயார் நிலை யில் உள்ளது. கடந்த 5 ஆண்டு களில் 400-க்கும் அதிகமான நூல் கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட் டுள்ளன.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 28-ல் (இன்று) சென்னையில் கவிஞர் நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில், சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில், திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அவர் எழுதிய ‘மண்ணும், மழை நீரும்’ என்ற நூலுக்காக பரிசு வழங்கப்படுகிறது என்றார்.