கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா இன்று தொடக்கம்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா இன்று தொடக்கம்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையை தலைமையிடமாகக் கொண்டு கடையேழு வள்ளல் களில் ஒருவரான வல்லில் ஓரி ஆட்சி செய்து வந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான ஆடி மாதம் 17, 18 ஆகிய 2 நாட்கள் வல்வில் ஓரி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வல்வில் ஓரி விழா இன்று (1-ம் தேதி) தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகிக்கி றார். முதல் நாளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தோட்டக்கலைத் துறையின் சார்பில் மலர் கண்காட்சி அமைக் கப்பட்டுள் ளது. அரசின் சாதனை விளக் கக் கண்காட்சி நடைபெற உள்ளது.

நாளை (2-ம் தேதி) வில் வித்தைப் போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், மாலை யில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. விழாவை யொட்டி நாமக் கல், சேலத் தில் இருந்து சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in