ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் ரயில் மறியல் முயற்சி: வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்கிறது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் ரயில் மறியல் முயற்சி: வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்கிறது
Updated on
1 min read

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக் கும் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி புதுக் கோட்டையில் நேற்று ரயில் மறி யலில் ஈடுபட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 97 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக பிப்.15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது.

இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோள் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும், இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்ட வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையில், புதுக்கோட் டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று அக்கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 97 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிறப்பு சட்டத் திருத்தம்

வடகாட்டில் 7-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட் டத்தில் ஆலங்குடி சட்டப் பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கருணாகரன், மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், நாசாவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் எஸ்.பார்த்திபன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நவீன், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.

இதேபோல, நல்லாண் டார்கொல்லையிலும் இரவு, பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in