Last Updated : 25 Apr, 2017 09:09 AM

 

Published : 25 Apr 2017 09:09 AM
Last Updated : 25 Apr 2017 09:09 AM

கட்சி தொடங்க ரஜினியை அழைக்கும் சுவரொட்டிகள்

கோவை மாநகரை பொறுத்தவரை ரஜினியின் படங்கள் வெளியாகும் போதும், அவர் குறித்த அரசியல் சர்ச்சை கள் எழும்போதும், ‘நீயின்றி தமிழகம் இல்லை; தலைவா வா, தலைமை ஏற்க வா’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ரஜினி ரசிகர் மன்றங்கள் பெயரில் வரும். ஆனால், கடந்த சில நாட்களாக, கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம், கோவை பசுமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், கோவை மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் போன்ற பெயர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

பசுமை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் சுவரொட்டியில், ‘ரஜினிகாந்த் அவர்களே, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. விவசாயம் அழிகிறது. பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாடு இழிநிலைக்கு காரணம் கோவையை சுற்றியுள்ள நீர்நிலைகளை யாரும் சரிசெய்யாததே. விவசாயிகளின் துயரம் நீக்க, விவசாயம் காக்க, விளைச்சலை காக்க, இன்று இந்த நிலைமைக்கு காரணமான பழமையான அரசியல் அமைப்புகளை அகற்ற வேண்டும்.

அதற்கு நீங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டும். உடனே விவசாயிகள் மாநாட்டைக் கூட்டி மக்கள் முன் தோன்றி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க, விளைநிலங்களை பாதுகாக்க, புதிய சட்டம் இயற்ற நாடாளுவேன் என பிரகடனப்படுத்த வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் சிலர் கூறியதாவது:

ஆண்டாண்டு காலமாக ரசிகர்களே போஸ்டர்களை அச்சடித்து ரஜினியை அரசியலுக்கு வர அழைத்தும் எடுபட வில்லை. எனவே இப்போது அந்தந்த இயக்கங்கள் மூலமாக அழைப்பதே சரியாக இருக்கும் என்ற நோக்கில் இயங்குகின்றனர். அதற்கு முன்னோடி யாக திருச்சி மாவட்ட ரசிகர்கள் செயல் படுகின்றனர்.

அவர்களே கோவையின் சிறு, குறு தொழில், விவசாயம், இயற்கைச் சூழல் போன்றவற்றை அச்சடித்து மாவட்ட வாரியாக விநியோகித்து வரு கின்றனர். ஜெயலலிதா மறைவு, கருணா நிதி உடல்நலம் இன்றி இருப்பது, பெரியதொரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை சரிப் படுத்த ரஜினியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்திருக்கிறோம். அதற்காகவே இந்த போஸ்டர்கள் களம் இறங்குகின்றன என்றனர்.

கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டு மல்ல, ரஜினியை நேரடியாக அரசிய லுக்கு வரச்சொல்லியும் போஸ்டர்களை நேற்று முதல் ஒட்டி வருகிறோம். வேலூர் மாவட்ட ரசிகர் மன்றத் தலைவராக சோளிங்கர் ரவியை ரஜினி அறிவித் திருப்பது புது எழுச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இதுவரை ரசிகர் மன்ற நிர்வாகி களை நேரடியாக ரஜினி அறிவித்தது இல்லை. வரும் 10-ம் தேதி முதல் தினந் தோறும் மாவட்ட வாரியாக 500 ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க அறிவிப்பு செய்யப்பட்டு விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தபாலிலும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதையும் நேரடியாக ரஜினியே செய்கிறார். இதுவெல்லாம் இதுவரை ரசிகர்களுக்கு நடந்தேயிராத அனுபவம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x