

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டம் திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடித்துவைக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், காமராஜர் சாலை வழியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாலும் கடந்த இரண்டு நாட்களாக மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பொதுவாகவே சென்னைக்கு வருபவர்கள் மெரினா கடற்கரையோடு, எம்ஜிஆர் சமாதியையும் காண வருவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்கும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் மெரினா கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக அங்கு போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். மெரினாவில் இருந்து இளைஞர்கள் செல்ல மறுத்ததால் தடியடியும் நடத்தப்பட்டது. அத்தோடு மெரினா காமராஜர் சாலை வழியாகச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருவதால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) காமராஜர் சாலை வழியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
அதன் புகைப்படப் பதிவுகள்: