Published : 26 Aug 2016 08:50 AM
Last Updated : 26 Aug 2016 08:50 AM

கோகுலாஷ்டமி கோலாகல கொண்டாட்டம்: வீடுகளில் நிவேதனங்கள் படைத்து வழிபாடு

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளான கோகுலாஷ்டமி நேற்று உற்சாகத்துடனும், பக்திப் பெருக் குடனும் கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணரின் பாதங் களைப் பதித்தும் நிவேதனங்கள் படைத்தும் சுவாமியை வழிபட்டனர்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தேய் பிறையில் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்த நாளில் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அஷ்டமி திதியை அடிப்படையாகக் கொண்டு ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி என்ற பெயரில் இப்பண்டிகை கொண்டாடப்படும். தென் மாநிலங்களிலும் இந்த நாளில் பரவலாக கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் நடைபெறும்.

நேற்று கோகுலாஷ்டமி கொண் டாடப்பட்டது. வீடுதோறும் பகவான் கிருஷ்ணரே வந்து அருள்பாலிக் கிறார் என்ற ஐதீகத்துடன், வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை அரிசிமாக்கோலத்தால் கிருஷ்ணன் பாதங்களைப் பதித்தனர். விரதம் இருந்தும், சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம் போன்றவற்றை சுவாமிக்குப் படைத்தும் வழிபட்டனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில், நேற்று நாள் முழுவதும் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. காலையில் ஆரத்தி, பூஜை, பஜனை உள்ளிட்டவை நடந்தன. கிருஷ்ணனைப் போற்றும் வகையில் இரவு இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன.

பல்வேறு இந்து கலாச்சார அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தாஜி சிறப்புரை நிகழ்த்தினார். மயிலாப்பூர் நந்தலாலா கலாச்சார மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜனன வைபவம் கோலாகலமாக நடந்தது.

வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ரோகிணி நட்சத்திர நாளான இன்று ஸ்ரீஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர். கோயில் களிலும் இன்றே ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள், மேற்கு மாம்பலம் கோதண்டராமர், நங்கநல்லூர் லட்சுமி ஹயக்ரீவர் உள்ளிட்ட கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x