முடிச்சூர் கிராம பகுதியில் கருவேல மரங்களை அழிக்க களம் இறங்கிய இளைஞர் அமைப்பு

முடிச்சூர் கிராம பகுதியில் கருவேல மரங்களை அழிக்க களம் இறங்கிய இளைஞர் அமைப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந் துள்ளன. இவை நீரை அதிகமாக உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வறட்சி ஏற்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய நாடு என்ற அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் முடிச்சூர் கிராமப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக முடிச்சூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விவசாய நாடு அறக்கட்டளை நிறுவனர் ராஜேஷ் கூறியதாவது:

விவசாயிகளின் தொடர் தற்கொலைக்கு வறட்சிதான் முக்கிய காரணமாக உள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் நம்மால் நீரை சேமிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் விவசாய நாடு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் ஆதரவு திரட்டி னோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எங்கள் அமைப்பில் இணைந்துள்ளனர்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பிறகு அதன் தீமைகள் குறித்து பள்ளி மாணவர் கள், பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். சீமைக் கருவேல மரத்தை அகற் றிய இடத்தில் நம் பாரம்பரிய மரங்களான வேம்பு, அரச மரம், அத்தி மரம், ஆலமரம், போன்ற வற்றை நட்டு பராமரிக்கவுள் ளோம். இதன் மூலம் மழை வளத்தை பெருக்கி, மண் வளத்தை காக்கும் நடவடிக்கை களில் இறங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in