

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வண்டலூரில் வரும் 8-ம் தேதி நடக்கிறது.
பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பில் மோடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீவிர வாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு பல மடங்கு பாதுகாப்பை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குஜராத் முதல்வராக மோடி இருப்பதால், அந்த மாநிலத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் வண்டலூருக்கு விரைவில் வரவுள்ளனர்.