

ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி பெண்ணிடம் 80 சவரன் நகைகளை மோசடி செய்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரம் குஜ்ஜி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சரண்யா (23). சென்னையில் ஒரு கல்லூரியில் பிஎல் படிக்கிறார். அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்த பாலமணிகண்டனும்(29), சரண்யாவும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், “நான் ஐபிஎஸ் முடித்து விட்டேன். இன்னும் 3 மாதங்களில் போலீஸ் அதிகாரியாகிவிடுவேன். பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று பாலமணிகண்டன் ஆசை காட்டியுள்ளார். பின்னர் தனக்கு ஓர் அவசர தேவைக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூற, அதை நம்பிய சரண்யா தன்னிடம் இருந்த 80 சவரன் நகைகளை கொடுத் தாராம். ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும் பாலமணிகண்டன் வேலைக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த சரண்யா நகைகளை திருப்பிக் கேட்டா ராம். அப்போது, நகைகளை கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று பாலமணி கண்டன் மிரட்ட, அதிர்ச்சி அடைந்த சரண்யா டிபி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீ ஸார் பாலமணிகண்டனை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறை வாகிவிட்டார்.