

வெட் கிரைண்டர் மீது விதிக்கப் பட்டுள்ள 28 சதவீத ஜிஎஸ்டியை குறைக்குமாறு கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள் ளது.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) வெட் கிரைண்டர் உற்பத்திக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 சதவீத மதிப்பு கூட்டு வரி (வாட்) மட்டுமே உள்ள நிலையில், ஜிஎஸ்டியால் வெட் கிரைண்டர்கள் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரும் அபாயம் உள்ளது.
வெட் கிரைண்டர் உற்பத்தி யாளர்களில் 98 சதவீதம் பேர் சிறு குறு தொழில் சார்ந்தவர்கள். அவர்கள் தமிழக அரசின் வரியாக 5 சதவீத வரியை செலுத்தி கிரைண் டர்களை உற்பத்தி செய்து கடைக்காரர்களுக்கு கொடுத்து 2 மாத தவணையில் பணத்தை பெற்றுவருகின்றனர். இனி அவர் கள் 28 சதவீத வரியை உடனடி யாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது உற்பத்தியாளர் களையும், நுகர்வோரையும் பெரி தும் பாதிக்கும். இதனால் 400-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான பணியாளர் கள் உடனடியாக வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வரிக்குறைப்பு செய்யும்வரை அரசுக்கு செலுத்தும் வரிக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
கிரைண்டர் உற்பத்தி தொழி லையும், நுகர்வோரையும் பாதுகாக்க ஜிஎஸ்டியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.