Published : 05 Apr 2017 10:46 AM
Last Updated : 05 Apr 2017 10:46 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 176 கடைகள் மூடல்: ஆந்திராவுக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள் - மதுபான கடைகளில் விறுவிறு விற்பனை

திருவள்ளூர் மாவட்டத்தில் 176 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் ஆந்திர பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட மதுபிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் மார்ச் 31-ம் தேதி இரவோடு இரவாக மூடப் பட்டன.

அதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் செயல்பட்டு வந்த 325 டாஸ்மாக் மதுபான கடைகளில், 176 கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூடியது. இதில், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 204 கடைகளில் 90 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.

அதேபோல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு உள் ளிட்ட பகுதிகள் அடங்கிய திரு வள்ளூர் மேற்கு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 121 டாஸ்மாக் மதுபான கடைகளில், 86 கடைகள் மூடப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவால் திருவள்ளூர் மாவட்டத்தில் மூடப் பட்ட டாஸ்மாக் மதுபான கடை களில் ஆவடி, திருவொற்றியூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை யின் புறநகர் பகுதிகளைவிட திருவள்ளூர், திருத்தணி, பொன் னேரி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆகவே, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் 35 டாஸ்மாக் மதுபான கடைகளே தற்போது எஞ்சியுள்ளன.

இதனால், திருவள்ளூர், திருத் தணி, பள்ளிப்பட்டு, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மதுபிரியர்கள் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திர பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், ஆந்திர மதுபான கடை களில் விற்பனை களைகட்டுகிறது.

குறிப்பாக, திருத்தணி நகரில் செயல்பட்டு வந்த 5 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டதால், திருத்தணியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள ஆந்திர பகுதியான தடுக்குப்பேட்டையில் உள்ள ஆந்திர மதுபான கடை களில் மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.

அதேபோல் திருவள்ளுர் நகரில் இயங்கி வந்த 7 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால், திருவள்ளூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள கனகம் மாசத்திரத்தினை ஒட்டியுள்ள ஆந்திர பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளுக்கு மதுபிரியர் கள் சென்றவண்ணம் உள்ளனர்.

மேலும் ஆர்.கே.பேட்டை, பள் ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆரம் பாக்கம் பகுதிகளில் கடைகள் செயல்படாததால் பல்ஜிகண் டிகை, நாகலாபுரம், சத்தியவேடு, பனங்காடு உள்ளிட்ட ஆந்திர பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில், திருவள்ளூர் மாவட்ட மதுபிரியர்களால் விற்பனை களை கட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x