வைர விழாவுக்கு வந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இணைந்து செயல்படுவோம்: சீதாராம் யெச்சூரி கருத்து

வைர விழாவுக்கு வந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இணைந்து செயல்படுவோம்: சீதாராம் யெச்சூரி கருத்து
Updated on
1 min read

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவுக்கு வந்த தலைவர் கள் அனைவரும் குடியரசுத் தலை வர் தேர்தலிலும் இணைந்து செயல் படுவோம் என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி யின் சட்டப்பேரவை வைரவிழா வில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னை வந்த பல்வேறு கட்சி களின் தலைவர்கள், நேற்று கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங் களவை எம்.பி.யுமான டி.ராஜா கூறியதாவது:

தற்போதைய சூழலில்,மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கை கள் மக்கள் விரோதக் கொள்கை களாக உள்ளன. மதவெறிக் கொள்கையை முன்னிலைப்படுத் தும் வகையில் இருக்கிறது. மேலும், நாடாளுமன்றத்தை சிறுமைப் படுத்தும் வகையிலும் பாஜ அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள தைப் போல், பொதுத்துறை நிறுவனங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. பல்வேறு வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள் ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது. கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் அனைத்து தலைவர்களும் பங்கேற் றுள்ளோம். அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவரே முன்னெடுத்து பல பணிகளைச் செய்திருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறிய தாவது:

17 கட்சிகளின் தலைவர்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவுக்கு வந்த தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இணைந்து செயல்படுவோம். ஏற்கெனவே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், 17 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். பொது வேட்பாளரை நிறுத்து வது தொடர்பாகவும் ஆலோசித் துள்ளோம். எனவே, அனைவரும் சேர்ந்து எங்கள் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடமும் ஆலோசிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in