ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடருமா நலத்திட்டப் பணிகள்?

ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடருமா நலத்திட்டப் பணிகள்?
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பிறகு அந்தத் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் வந்தன.

கடந்த 3 ஆண்டுகளில் காகித அட்டை தொழிற்சாலை, சிப்காட் தொழிற்பேட்டை, தேசிய சட்டப் பள்ளி, மகளிர் தோட்டக் கலைக் கல்லூரி, இந்திய தொழில்நுட்ப மையம், வண்ணத்துப் பூச்சி பூங்கா, நட்சத்திர வனம், காவிரியில் தடுப் பணை, திருவானக்கா டிரங்க் ரோட்டில் புதிய ரயில்வே பாலத் துடன் சாலை அகலப்படுத்தும் பணிகள், கொள்ளிடம் ஆற்றில் மேம்பாலம், யாத்ரிகர் நிவாஸ், உள்விளையாட்டு அரங்கம், குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையம், வாழை பதப்படுத்தி விற்பனை செய்யும் நவீன குளிரூட்டு நிலையம், காந்தி சந்தை மொத்த வணிக நிறுவன வளாகம் என ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தத் தொகுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பல இன்னமும் நிறைவுபெற வில்லை. அந்த திட்டங்களை செயல்படுத்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது காட்டிய வேகத்தை அதிகாரிகள் இனியும் காட்டுவார் களா என்பது சந்தேகமே.

தனது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தனது தொகுதிக் குட்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச கணினிப் பயிற்சியும், தையல் பயிற்சியும் அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார். இந்த பயிற்சியை அளிப்பதற்காக 7 கணினிகள், 7 தையல் இயந்திரங்கள் வாங்கப்பட்டு 3 பெண் பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 140 பெண்கள் கணினிப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று தனியார் நிறுவனங்களில் வேலையில் அமர்ந்து தங்களது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திவருகின்றனர்.

190 பெண்கள் தையல் பயிற்சி முடித்து சிலர் தனியாரிடமும் பலர் சொந்தமாகவும் தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது 25 பெண்கள் கணினி பயிற்சியும் 48 பெண்கள் தையல் பயிற்சியும் பெற்று வருகின்றனர். சுமார் 500-க் கும் மேற்பட்ட பெண்கள் இலவச பயிற்சிக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இனிமேல் இந்த இலவச சேவை தொடருமா என்பதுகுறித்து கவலையடைந்துள்ளனர் விண் ணப்பித்து காத்திருப்பவர்கள்.

குற்றவாளி என அறிவிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளதால் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்கிற தகுதியை ஜெயலலிதா இழந்து விட்டார்.

அதனால் இந்த தொகுதி யில் அவரால் தொடங்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடக்குமா என் கிற சந்தேகம் மற்றும் கவலையை அந்தத் தொகுதி மக்களிடம் பரவலாகக் காணமுடிகிறது.

அவரது தொகுதி அலுவலக பணியாளரான பரமேஸ்வரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நாங்கள் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவி பறிபோனதாக கருதவில்லை. இன்னும் சில தினங்களில் இந்த தீர்ப்புக்கு தடை வாங்கி இதே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கும் நிலையை அம்மா உருவாக்குவார்” என்றார் நம்பிக்கையுடன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in