

தமிழகத்தில் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை தற்போது மாற்ற வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்று சசிகலா கணவர் எம்.நடராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று இரவு நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் நிறைவு விழாவில் பங்கேற்று எம்.நட ராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அவரை மாற்றவேண்டிய அவசியம் தற்போது எழவில்லை.
மோடி எண்ணம் நிறைவேறாது
தமிழகத்தில் பெரும்பான் மையுடன் ஆளும் அதிமுகவை உடைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தை காவியமயமாக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது. அதிமுகவை உடைக்கும் பிரதமர் மோடியின் எண்ணமும் நிறைவேறாது. கட்சியையும் எங்களையும் அழிக்க நினைக்கும் பாஜகவை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம். மாட்டேன் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக நாங்கள்தான் இருந்தோம். ஜெயலலிதா ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதத்தை பறித்து வைத்து காப்பாற்றியதும் நாங்கள்தான். அவர் முதல்வர் ஆக பாடுபட்டதும் நான்தான்.
அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராவது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறு எம்.நடராஜன் தெரிவித்தார்.