

எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை எண்ணெய் பரவியுள்ளதால் கடலோரப் பகுதி யில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கடல் ஆமைகளும், மீன்களும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. எனவே இந்த கச்சா எண்ணெயை அகற்றும் நடவடிக்கைகளை திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. எர்ணாவூர் கடலோரப் பகுதியில்தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது. மற்ற கடலோரப் பகுதிகளில் மணல் பரப்பில் எண்ணெய் படிந்துள்ளது.
கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் சென்னை குடிநீர் வாரியத்தின் 3 நவீன கழிவுநீர் உறிஞ்சு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. மேலும் காமராஜர் துறை முக நிர்வாகம், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் நிர்வாகம், கடலோரக் காவல் படையின் மாசு தடுப்பு அணியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என நூற்றுக் கணக்கானோர் இப்பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இயந்திரங்கள் மூலமாகவும், பாத்திரங்களைக் கொண்டு அள்ளியும் அகற்றி வருகின்றனர். கடல் மணல் பரப்பில் படிந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளும் நடைபெற்று வரு கின்றன.
இப்பணிகளை அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அதுல்யமிஸ்ரா, மீன் வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, கடலோரக் காவல் படையின் சென்னை தெற்கு பிரிவு கமாண்டர் பிரதீப் பி.மண்டல் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
சீரமைப்புப் பணியில் சுமார் 10 பேர் மட்டுமே கடலோரக் காவல் படையின் மாசு தடுப்பு அணியினர். சிலர் மட்டுமே தன்னார்வலர்கள். மற்றவர்கள் அனைவரும் பல் வேறு துறைகள் சார்பில் அழைத்து வரப்பட்ட, அதே பகுதி யைச் சேர்ந்த மீனவர்கள். அந்த மீனவர்களிடம், கடல் நீரில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பயிற்சி பெற்றுள்ளீர்களா என்று கேட்டபோது, “இந்த பிரச்சினையால் நாங்கள் கடந்த 2 நாட்களாக நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. எனவே வருவாயை இழந்துள் ளோம். இந்நிலையில், சீரமைப்புப் பணிக்கு அழைத்ததால் வந்து விட்டோம்” என்றனர்.
போதிய கவசங்கள் இல்லை
சீரமைப்புப் பணிக்கு மீனவர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில் அவர்களுக்கு போதிய கையுறை, காலணி ஆகியவை கொடுக்கப்படவில்லை. சீருடை மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் அவர்கள் பணியில் ஈடு படுத்தப்படவில்லை. உரிய கவ சங்கள் வேண்டும் என்று கட லோரக் காவல் படையினர் அவ சரப்படுத்தியபோது, சென்னை யின் பல்வேறு கடைகளுக்கு கவசங்கள் வாங்க ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காமராஜர் துறைமுக அலுவலர்கள் பதில் அளித்தனர். இதனால், போதிய ஆட்கள் வரவழைக்கப்பட்ட நிலையிலும், சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாமல், அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
சீரமைப்புப் பணியை தலைமை யேற்று நடத்தும் கடலோரக் காவல் படை சென்னை- தெற்கு பிரிவு கமாண்டர் பிரதீப் பி.மண்டலிடம் கேட்டபோது, “கச்சா எண்ணெய் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை எர்ணாவூர் பகுதியிலிருந்து மட்டும் 5 டன் கச்சா எண்ணெயை அகற்றியுள்ளோம். இப்பணியில் கூடுதலாக ஆட்களை ஈடுபடுத்தி, பணியை விரைவுபடுத்த உள்ளோம்” என்றார்.