

சட்டப்பேரவையில் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கடமையை திமுக சரியாகச் செய்து வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக முதல்வர் சித்த ராமையா, மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.5,100 கோடி ஒதுக்கப்போவதாக அறிவித்துள் ளார். தமிழகத்துக்கு காவிரி நீரில் ஒரு சொட்டு கூட கொடுக்கக் கூடாது என்பதற் காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுகளையும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மாநில அரசு சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு எதிராக மத்திய அமைச் சர் மேனகா காந்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பேரவையில் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது எதிர்கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையை திமுக சரியாகச் செய்து வருகிறது. எதிர்கட்சித் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் சட்டப் பேரவையில் பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். சபாநாயகர், அமைச்சர்கள் குறுக்கீடு செய்யும் நிலைமையை தொடரக்கூடாது.
கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின் புதிய கல்விக் கொள் கையை அமல்படுத்த வேண்டும். ஒரு கட்சியின் கொள்கையை புகுத்தும் வகையில் அமல் படுத்தக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில், சூழ்நிலைக்கு ஏற்ப, காலதாமதமின்றி கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்.