

கேரளத்தில் நடைபெற்ற சோலார் பேனல் மோசடி வழக்கு குறித்த கமிஷன் விசாரணையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளாதாக சரிதா நாயர் தெரிவித்தார்.
கோவை வடவள்ளியில் உள்ள சர்வதேச ஆலோசனை மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி, ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத் தில் சரிதா நாயர் நேற்று ஆஜரானார். வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்படவில்லை. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், விசார ணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள மாநில காங்கிரஸ் கட்சிக் குள் இருந்த உட்கட்சி பூசலில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண் டியை சிக்க வைக்க என்னைக் கருவி யாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்களின் திட்டப்படி, என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிக்க வைத்துள்ளார்கள். சோலார் பேனல் அமைக்க முதலீட்டாளர்களிடம் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பணம் பெற்றார். என்னிடமும் உம்மன் சாண்டி பணம் பெற்று ஏமாற்றி னார். இந்த வழக்கில் உண்மை யான குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சுயசரிதையாக எழுதி வருகிறேன். அதில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் உள் ளிட்ட அனைவரது பெயர், விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் இடம்பெற்றுள்ள எல்லோருடைய பெயரும் அதில் இடம்பெறும்.
எங்களது நிறுவனத்தின் வாடிக் கையாளர் ஒருவரிடம் வருமான வரி பிரச்சினையைத் தீர்க்க தமிழகத் தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் பணம் கேட்டுப் பெற்றார். இது தொடர்பாக சோலார் பேனல் மோசடியை விசாரிக்கும் கமிஷனில் தெரிவித்துள்ளேன்.
திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்த மாகி இருக்கிறேன். ஒரு தமிழ் படத்தி லும், 4 மலையாள படங்களிலும் விரைவில் நடிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.