Published : 18 Jun 2016 08:04 AM
Last Updated : 18 Jun 2016 08:04 AM

செயற்கை இதயம், நுரையீரல் இயந்திரத்தை பயன்படுத்தி இதய நோயாளிக்கு சிகிச்சையளித்து சிம்ஸ் மருத்துவமனை சாதனை

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தீவிர இதய நோயாளியை குறுகிய கால செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்தை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்து சிம்ஸ் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

இது குறித்து சிம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் ஒரு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தீவிர இதய நோயாளிக்கு திடீரென நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படவே மாரடைப்பு ஏற்பட்டது. இது குறித்து சிம்ஸ் மருத்துவமனைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் சிம்ஸ் மருத்துவ நிபுணர்கள் அனைத்து அதி நவீன வசதிகள் கொண்ட 2 நீல நிற ஆம்புலன்ஸ்களில் நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றனர்.

சிம்ஸ் மருத்துவர்க் குழு தலைவர் டாக்டர் கோபாலமுருகன் அந்த நோயாளியை பரிசோதித்தார். இதயத்தின் தசை, மின் அமைப்பு, தடுக்கிதழ் அமைப்பு, ரத்தக் குழாய் கள் ஆகியவை கடுமையாக பாதிக் கப்பட்டிருந்ததால் அவருடைய இதயம், நுரையீரல் இயக்கம் அபாயகரமான கடைசிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

உடனே நோயாளியின் இதயம் மற்றும் நுரையீரலை 'எக்ஸ்ட்ரா கார் போரல் லைஃப் சப்போர்ட்' என்னும் செயற்கை இதயம் மற்றும் நுரை யீரல் இயந்திரத்துடன் மருத்துவர் கள் இணைத்தனர். அந்த இயந்திரத் தில் உள்ள செயற்கை நுரையீரல் மூலம் நோயாளியின் உடலில் உள்ள ரத்தம் எடுக்கப்பட்டு அதில் பிராணவாயு கலக்கப்பட்டு மீண்டும் உடலில் செலுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரத்தில் நோயாளியின் உடல்நிலை சீரடைந்தது.

அடுத்த சில நாட்களுக்கு நோயா ளியின் இதய தசைகளின் செயல் பாடுகளை மேம்படுத்த கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இத னால் அவரது இதயம், நுரையீரல் சீராக செயல்படத் தொடங்கின. பின்னர் செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

நோயாளியை பரிசோதித்த டாக்டர் வி.வி.பாஷி அவருக்கு தடுக்கிதழ் மாற்று மற்றும் மாற்று வழி இதய அறுவை சிகிச்சை உள் ளடக்கிய திறந்த நிலை இதய அறு வை சிகிச்சையை ஒரே நேரத்தில் செய்து முடித்தார். இதனால் அந்த நோயாளி குணமடைந்தார்.

“சிம்ஸ் மருத்துவமனை இதயக் கோளாறுகளுக்கான மேம்பட்ட, அசத்தலான மற்றும் முழுமையான சிகிச்சைகளை வழங்கியது” என்று குணமடைந்த நோயாளி நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து கூறும் போது, “சிம்ஸ் அதிநவீன மருத் துவத் தொழில்நுட்பத்தை நோயா ளிக்கு கிடைக்க வழிவகுத்து விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப் பாற்றி வருகிறது. எத்தகைய அவசர மருத்துவச் சூழலையும் சமாளிக்கும் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் வசதி இங்கு உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x