Published : 20 Jan 2016 08:21 AM
Last Updated : 20 Jan 2016 08:21 AM

இறுதி பட்டியல் இன்று வெளியானாலும் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

தென்மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் சட்டப் பேரவை தேர்தல் ஏற்பாடு கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக் கானி மதுரையில் ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று ஆலோசனை நடத் தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. 8 ஆயிரம் இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து 75 ஆயிரம் இயந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை வெளியிட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் 3 நாளில் அச்சிட்டு, 10 நாளில் வழங்கும் பணி தொடங்கும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பட்டியலில் குறைகள் இருந் தாலும் நிவர்த்தி செய்ய அவகாசம் உள்ளது. கல்லூரி மாணவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்துள் ளதை ஆட்சியர்கள் உறுதிப் படுத்துவதுடன், தேவைப்பட்டால் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் புதிய வாக்காளராக சேர விண்ணப் பித்தால் அவரது விண்ணப்பம் மீதான பரிசீலனை வெளிப்படை யாக இருக்கும். இதை விண்ணப்பதாரர் குறுஞ்செய்தி மூலம் அறியலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x