

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்துக்கு திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
திமுகவின் தலைமைக் கழக பேச்சாளரான தீப்பொறி ஆறுமுகம் கல்லீரல் பாதிப்பால் கடந்த 11-ம் தேதி முதல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத் தில் பங்கேற்க நேற்று மதுரைக்கு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தீப்பொறி ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தீப்பொறி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார். சிகிச்சை பற்றியும் அவர் கேட்டறிந்தார். அப்போது, மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தீப்பொறி ஆறுமுகத்தின் குடும்பத் தினரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் ஐ.பெரிய சாமி, மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ., வேலுச்சாமி மற்றும் எம்எல்ஏ-க்கள் தியாக ராஜன், ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.