

`பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் கேரளா வின் பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா வரும் 11-ம் தேதி நடக்கிறது. அன்று, 40 லட்சம் பெண்கள் பொங்கலிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் அருகேயுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாக்குழு தலைவர் சந்திரசேகரன் பிள்ளை, நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
இக்கோயில் விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 11-ம் தேதி பொங்கல் விழா நடக்கிறது. கடந்த ஆண்டு 35 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் பங்கேற்கின்றனர். சமூகத்தில் அனைத்து நிலையிலும் வாழும் பெண்கள் இணைந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது இதன் சிறப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.