விலை பட்டியல் வெளியிட்டது ஐஆர்சிடிசி: ரூ.30-க்கு 4 இட்லி, ஒரு வடை

விலை பட்டியல் வெளியிட்டது ஐஆர்சிடிசி: ரூ.30-க்கு 4 இட்லி, ஒரு வடை
Updated on
1 min read

ரயில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் நிலவியதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பணியில் இருந்து ஐஆர்சிடிசி விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியாரிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதில்லை. சில இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பெரும்பாலான இடங்களில் உணவு தாமதமாக வருகிறது என ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து, பல்வேறு மாற் றங்களுடன் புதிய உணவுக் கொள்கையை ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிரபு சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்படி, ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிப்பது ஒரு பிரிவாகவும், அதை விநியோகம் செய்வது மற்றொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது. இதில் உணவு தயாரிப்புப் பணியை ஐஆர்சிடிசி மேற்கொள்ளும். சிறந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதனிடம் உணவு விநியோகப் பணிகள் வழங்கப்படும்.

ரயில் நிலையங்களில் கடைகள் அமைப்பதில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்களில் பால் மையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில், உணவுப் பொருட்களின் விலை பட்டியல் நேற்று அறிவிக்கப் பட்டது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பயணிகளுக்கு தரமான உணவுகளை வழங்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய உணவு தயாரிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதிக கட்டண வசூலை தடுப்பது, பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பது போன்ற பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது உணவுகளின் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் மூலம் பயணிகளுக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்களை வழங்க உள்ளோம். இட்லி, பொங்கல், வடை, சாப் பாடு, பரோட்டா, சப்பாத்தி, முட்டை, பிரட், பட்டர் ஆம்லெட் உள்ளிட்டவை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in