

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 85 அரசு, 22 அரசு உதவி பெறும் மற்றும் 461 தனியார் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்மேன், சிவில், வெல்டர், மெக்கானிக் டீசல், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டெய்லர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ‘www.skilltraining.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.
முன்னதாக ஐடிஐயில் சேர ஜூன் 20 வரை விண்ணப்பிக் கலாம் என அறிவிக்கப்பட்டது தற்போது காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.