நீர்நிலைகள், சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

நீர்நிலைகள், சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி நீர்நிலைகள் மற்றும் சாலை யோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள சந்தைப்பேட்டை, சேலம் சாலை, லண்டன்பேட்டை, ராயக்கோட்டை சாலை, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகள் இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் சேரும் இறைச்சி கழிவுகளை, முறையாக அப்புறப்படுத்தாமல் காலி சிமென்ட் சாக்கு பைகளில் கட்டி வைக்கின்றனர். இக்கழிவுகள் அதிக அளவில் சேர்ந்தவுடன் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது நகரைச் சுற்றி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் வீசிச் செல்கின்றனர்.

இன்னும் சிலர் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் வீசி விட்டுச் செல்கின்றனர். இதனை அப்பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் சிமென்ட் பையை பிரித்து சாலை முழுவதும் சிதறி விடுவதால், சாலை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கோழி இறகுகள் படர்ந்து கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துகள் நிகழ்கிறது. இதேபோல் நகரைச் சுற்றியுள்ள சின்னஏரி, தேவசமுத்திரம் ஏரி, புதூர் ஏரிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணன் கூறும் போது, சாலைகள், நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வரும் நிலையில், குப்பை கழிவுகள் கொட்டுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in