Published : 02 Jan 2016 08:57 AM
Last Updated : 02 Jan 2016 08:57 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு வழிபாடு

புத்தாண்டு பிறப்பை ஒட்டி நாகப் பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத் தின் பிரதிபலிப்பு இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் வேளாங் கண்ணியில் எதிரொலித்தது. புத் தாண்டுக் கொண்டாடங்களுக்காக வேளாங்கண்ணி புனித ஆரோக் கிய மாதா பேராலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தாலும் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

2015-ம் ஆண்டுக்கு விடை கொடுத்து புதிய ஆண்டான 2016-ஐ வரவேற்கும் விதமாக சில ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலை மையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு புதிய ஆண்டை வரவேற்று அனைவரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆளுயர குத்துவிளக்கை ஆயர் ஏற்றிவைத்து, புத்தாண்டை வரவேற் றார். அதைத் தொடர்ந்து நடை பெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாங் கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார், துணை அதிபர் சூசைமாணிக்கம், உதவி பங்குத்தந்தை ஆரோக்கியசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புத்தாண்டு தினமான நேற்று காலைமுதல் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் திருப்பலி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x