

ஆவின் நிறுவன தயாரிப்பு நெய் லிட்டருக்கு ரூ.50, வெண்ணெய் 500 கிராமுக்கு ரூ.40 திடீரென விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் சார்பில் பால் மட்டுமல்லாது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மைசூர் பாகு, பால் கோவா, பேரீட்சை கோவா, குலோப் ஜாமூன் உள்ளிட்ட இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், வெண்ணெய், நெய், தயிர், பன்னீர், உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற் றுக்கான விலைகள், தனியார் நிறுவனங்களைவிட சற்று குறை வாகவே இருக்கும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென, வெண்ணெய் 500 கிராமுக்கு ரூ.40-ம், நெய் லிட்டருக்கு ரூ.50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும் ஆவின் சார்பில் வெளியிடப்பட வில்லை. அதன் இணையதளத் திலும் உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்தந்த விற்பனையகங்களில் மட்டும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கடந்த நவம்பர் 2014-ல் உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல்தான் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. ஆவின் நிர்வாகத்தின் சத்தமில்லாமல் செய் யப்பட்ட இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்திடம் கேட்டபோது, “பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவு அதி கரித்துள்ளது. தனியார் நிறு வனங்கள் பல முறை விலை உயர்த்திய நிலையில், ஆவின் நிறுவனம் 2014-ம் ஆண்டுக் குப் பிறகு விலையை உயர்த்த வில்லை. ஆவின் உற்பத்தி நெய், வெண்ணெய் ஆகிய வற்றின் விலை, தனியார் நிறுவன விலையைவிட மிகக் குறைவாகத்தான் இருந்தது. தற்போது விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், தனியார் நிறு வனங்களைவிட ஆவின் உற்பத்தி பொருட்கள் விலை குறைவாகவே உள்ளன” என்றனர்.