தமிழகத்தில் குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக, மே 18-ல் நடைபெறவிருந்த குரூப்-2ஏ தேர்வு, ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா ஐ.ஏ.எஸ். இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு மே 18-ம் தேதியன்று தொகுதி-IIA (Group-IIA Services) (Non Interview Posts) உள்ளடக்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என பிப்ரவரி 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 16.05.2014 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மேற்படி தேர்வு வரும் 29.06.2014 அன்று முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in