

ஆவடியில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களையும் நிறுத்திச் செல்லவேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கம் நடத்த ரயில் பயணிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் படி, ஒருலட்சம் கையெழுத்து களைப் பெற தீர்மானிக்கப் பட்டுள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் தற்போது திருவனந்தபுரம், ஆலப் புழை, ஏற்காடு மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களில் இருந்து சென் னைக்கு வரும் ரயில்கள் நிறுத்தப் படுகின்றன. இதுகுறித்து, ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை தளவாடங்களை தயாரிக் கும் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களில் 70 சதவீதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு ரயில்களில் சென்று வருகிறார்கள். அவர்கள் வரும் விரைவு ரயில்கள் ஆவடியில் நிற்காததால் பெரம்பூர் அல்லது சென்ட்ரலுக்குச் சென்று விட்டு மீண்டும் புறநகர் மின்சார ரயிலை பிடித்து திரும்பி வரவேண்டியுள்ளது. இதனால், அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கோவை, சேரன், நீலகிரி, மங்களூர், பிருந்தாவன் உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் ஆவடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக்கோரி, பயணிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆவடியில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்குவது குறித்து, முறைப்படி கோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.