

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டம் நல்லூர் ஊராட்சி அவிச்சாகுடி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், நீடாமங்கலம் காமரா ஜர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப் பட்டன.
இதையடுத்து, அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று முன்தினம் இரவு நேரில் சென்று வீரமரணம் அடைந்த வீரர் களின் உடல்களுக்கு மலர்வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர், தமிழக முதல்வர் அறி வித்த கருணைத் தொகை தலா ரூ.20 லட்சத்துக்கான காசோ லையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
ஆட்சியர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) எம்.துரை மற்றும் பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய பின்னர், பத்பநாபன் உடல் நேற்று முன்தினம் இரவு அவிச்சாகுடியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த மற்றொரு வீர ரான செந்தில்குமாரின் உடல் நேற்று காலை 8 மணியளவில் நீடாமங்கலத்தில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, வெண்ணாற்றங்கரையில் உள்ள மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த சேலம் மாவட்டம் வீரகனூரை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் திருமுருகனின் உடல் திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான நல்லூருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சேலம் ஆட்சியர் வா.சம்பத், எஸ்பி ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், சட்டப் பேரவை உறுப் பினர் மருதமுத்து, துணை ராணுவப் படை டிஐஜி மிஸ்ரா, துணை கமாண் டர்கள் ஆறுமுகம், நாராயணன் மற்றும் திருமுருகனின் குடும்பத் தினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கு உள்ள மயானத் தில் 21 குண்டுகள் முழங்க திரு முருகனின் உடல் தகனம் செய் யப்பட்டது. முன்னதாக திரு முருகனின் மனைவிசெல்வியிடம், தமிழக அரசு சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ரூ.20 லட்சத் துக்கான காசோலையை வழங் கினார்.
மாவோஸ்ட் தாக்குதலில் மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்த பிச்சைஅழகுவின் மூத்த மகன் அழகுபாண்டி(28) பலியானார். இவரது உடல் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவில் மதுரை கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவ், மத்திய பாதுகாப்பு படை துணைத் தலைவர் விஜயந்திர அகர்வால் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று முன்தினம் இரவிலேயே காவல்துறையினர் மரியாதையுடன் அழகுபாண்டியின் உடல் அடக்கம் நடைபெற்றது.