மூளை ரத்தக்குழாய் அடைப்பால் பக்கவாதம் அபுதாபியை சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை: சென்னை சிம்ஸ் மருத்துவர்கள் சாதனை

மூளை ரத்தக்குழாய் அடைப்பால் பக்கவாதம் அபுதாபியை சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை: சென்னை சிம்ஸ் மருத்துவர்கள் சாதனை
Updated on
1 min read

மூளை ரத்தக்குழாய் அடைப்பால் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட அபுதாபியைச் சேர்ந்தவருக்கு சென்னை சிம்ஸ் மருத்துவ மனையில் 6 மணி நேர பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம டைந்துள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

கேரளத்தில் பிறந்த மணிகண் டன் (42), அபுதாபியில் நிரந்த ரமாக குடியேறிவிட்டவர். ஆரம்ப கட்ட பக்கவாதத்தால் இவரது இடது கை, கால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. இதற்காக அபுதாபியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அறுவை சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது மூளையின் வலது பக்க ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஆர்.சுரேஷ்பாபு, ஆலோ சகர் ரூபேஷ்குமார், ரித்தீஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, அடைப்பு ஏற்பட்ட ரத்தக்குழாய்க்கு பதிலாக தலையின் மற்ற பகுதி ரத்தக்குழாய் மூலமாக ரத்த ஓட்டத்தைச் சீரமைத்தனர். இந்த அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் டாக்டர்கள் கே.ஆர்.சுரேஷ் பாபு, ரூபேஷ்குமார் ரித்தீஷ் நேற்று மேலும் கூறியதாவது:

மணிகண்டனுக்கு ஏற்பட்ட நோய்க்கான அறுவை சிகிச்சைக்கு ஜப்பான் செல்லுமாறு அபுதாபியில் உள்ள நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நண்பரின் ஆலோசனைப்படி அவர் சிம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார்.

இப்படியே விட்டிருந்தால், கை, கால் செயலிழந் திருக்கும். பக்க வாதம் ஆரம்பகட்டத்தில் இருந்த தால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திவிட்டோம்.

பக்கவாதத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பை விரைவாக கண்டுபிடித்து தேவையான மருந்து கொடுத்தோ, அறுவை சிகிச்சை மூல மாகவோ மூளை முடக்குவா தத்தை தடுக்க முடியும். சிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டு களில் இதுபோல் 12 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in