Published : 06 Feb 2017 09:07 AM
Last Updated : 06 Feb 2017 09:07 AM

புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன் அதிமுகவில் இருந்து விலகல்

புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் அதிமுகவில் இருந்து நேற்று விலகினார்.

தமிழக சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக சசிகலா நேற்று தேர்வானார். இந்நிலையில், முன்னாள் எம்பி கண்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக வின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுகிறேன். என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அடுத்தகட்ட முடிவு தொடர்பாக உரிய தரு ணத்தில் தெரிவிப்பேன் என்றார்.

புதுச்சேரி அரசியலில் முக்கி யத் தலைவர்களில் கண்ணனும் ஒருவர். இவர் கடந்த 1985-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். கடந்த 1996-ல் தமாகா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரானார். 2000-ம் ஆண்டு திமுக - தமாகா கூட் டணி உடைந்தது. அதன் பின்னர் காங்கிஸுடன் கூட்டணி அமைத்து அதே பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர், தேனீ ஜெயக்குமாருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தார்.

இதனால், 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியது. கடந்த 2016 பிப்ரவரி 14-ல் அதிமுகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x