

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தியுள்ளது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற் படுத்தியுள்ளது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ் வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.கே.நகர் தொகுதியில் பல இடங்களில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள், எதிர்கட்சியினரை பிரச்சாரம் செய்யவிடாமல் அடித்து, உதைத்து தாக்குவதும், மிரட்டுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டன.
ஆர்.கே.நகருக்கு அப்பாற்பட்ட ராயபுரம், திருவொற்றியூர் பகுதி களில் தனியார் திருமண மண்டபங் களுக்கு வாக்காளர்களை வர வழைத்து, பணப்பட்டுவாடா நடை பெற்று வருவதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. தினகரன் பணத்தை வைத்து வாக்குகளை விலைபேசும் அதே நேரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் ஜெயலலிதா உடலைப் போன்ற பொம்மையை வைத்து பிரச்சாரம் செய்வது அரசி யல் அநாகரிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் உலக சுகாதார தினத்தன்று சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத் துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதியின் பணப்பட்டுவாடா வுக்கு முக்கிய காரணியாக இருப் பதே விஜயபாஸ்கர்தான் என்பது தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் தமிழக மக்கள் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.