

சேலம் அருகே மர்மமான முறையில் இளைஞர் இறந்தது தொடர்பாக பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மீது தீவட்டிப் பட்டி போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார்.
சேலம் அடுத்த பெரியவடகம் பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் சதீஷ்குமார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் சென்ற இருசக்கர வாகனம், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார் மீது மோதியது. இதில், கார் சேதம் அடைந்தது. இதையடுத்து, மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள், சதீஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென மாய மான சதீஷ்குமார், தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். சதீஷ்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து, இந்த வழக்கு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், டேனீஷ்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சவுரிராஜன் நேற்று முன்தினம் மாலை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். அவருடைய அக்கா என்ன நடந்தது என கேட்க, மாரியப்பன் கார் மீது பைக் மோதி விட்டதாக கூறியுள்ளார்.
அப்போது, மாரியப்பன், அவரு டைய நண்பர்கள் சபரி, யுவராஜ் ஆகியோர் காரை சேதப்படுத்திய தற்கு பணம் கேட்டு சதீஷ்குமாரின் சட்டையை பிடித்து மிரட்டியுள்ளனர். அதன்பின், சதீஷ்குமார் தண்டவா ளத்தின் அருகில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார். இதுகுறித்து போலீ ஸார் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள் ளது. தீவட்டிப்பட்டி போலீஸார் புகார் மனுவை பெற்று விசார ணையில் ஈடுபட்டுள்ளனர்.