Published : 01 Jan 2017 03:52 PM
Last Updated : 01 Jan 2017 03:52 PM

பன்னாட்டு நிறுவன பணியை உதறிவிட்டு வேத உபன்யாசத்தில் ஈடுபடும் மதுரை பொறியாளர்

பன்னாட்டு நிறுவனப் பணியை உதறிவிட்டு நாடு முழுவதும் வேத உபன்யாசம் செய்து வருகிறார் 38 வயது பொறியாளர் ஒருவர்.

மாதங்களில் சிறந்த மார்கழியில் இசைக் கச்சேரிக்கும், பஜனை கச்சேரிக்கும், உபன்யாசங் களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த மாதத்தில் ஆண்டாள் இயற் றிய திருப்பாவை அதிகள வில் பாடப்படும். மதுரை மதன கோபாலசுவாமி கோயிலில் ராமா னுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி மதுரை ஐக்கிய வைஷ்ணவ சபை சார்பில் திருப் பாவை உபன்யாசம் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு அரவிந்த் லோசனன் என்ற இளைஞர் நடத்தும் திருப்பாவை உபன்யாசம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அரவிந்த் லோசனன் அடிப்படையில் ஒரு பொறி யியல் பட்டதாரி. திருச் செந்தூர் அருகேயுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தென்திருப்பேரையைச் சேர்ந்தவர். சாம வேத வல்லுநர் வேளுக்குடி கிருஷ்ணனின் சீடர். குருவைப் போலவே வேத உபன்யாசத்தில் நாட்டம் அதிகம்.

பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேத உபன்யாசம் செய்து வந்தார்.

இந்தச் சூழலில் பணிபுரியும் நிறுவனத்தில் பதவி உயர்வுடன் 4 மாநில நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்பட்டது. அப்பணியை ஏற்றால் வேத உபன்யாசம் செய்ய நேரம் கிடைக்காத நிலை ஏற்படும் என்பதால், 27 வயதில் தன்னைத் தேடி வந்த உயர் பதவியை உதறி விட்டு முழு நேர வேத உபன்யாசம் செய்து வருகிறார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட உபன்யாச குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் லோசனன் கூறியதாவது: சிறு வயதில் வேதம் கற்றேன். வேளுக்குடி கிருஷ்ணன், அம்பத்தூர் தேவராஜன் சுவாமிகளின் உபன்யாசங்களால் ஈர்க்கப்பட்டு 18 வயதில் இருந்து உபன்யாசம் செய்து வருகிறேன். பன்னாட்டு நிறுவனப் பணியால் உபன்யாசம் செய்வதற்கு பாதிப்பு ஏற்படும் நிலை வந்ததால் பணியிலிருந்து விலகினேன்.

கடந்த 11 ஆண்டுகளாக ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, ஆழ்வார்களின் பாசுரம், ஆழ் வார்களின் சரித்திரம், திருவாய் மொழி, திருப்பாவை உபன்யாசம் செய்துவருகிறேன். அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூரில் உபன் யாசத்துக்கு அழைப்பு வந்துள் ளது. ஆந்திரம், குஜராத் மாநி லங்களில் இருப்பதுபோல் தமிழகத்திலும் பகவத் பக்தி அதி கரிக்க வேண்டும். அதை நோக்கி எனது உபன்யாசம் இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x