Published : 08 Apr 2017 10:55 AM
Last Updated : 08 Apr 2017 10:55 AM

கோயில் நகரமா? கொலை நகரமா? - அதிர்ச்சியில் உறையும் காஞ்சிபுரம் மக்கள்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கொலைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வரு வது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கோயில் நகரமான காஞ்சிபுரத் தில் பல்வேறு கோயில் திரு விழாக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பலர் அன்றாடம் வந்து செல்கின்றனர். ஆன்மிக நகரமாக திகழும் காஞ்சிபுரம், தொடர் கொலைச் சம்பவங்களால் திகில் நகரமாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 5-ம் தேதி மொட்டுக்கள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சந்திரசேகர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து 2 தினங்கள் கூட ஆகாத நிலையில் தேமுதிக நகர அவைத் தலைவர் சரவணன் தற்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இமயம் ரவி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தை பரபரப்புக் குள்ளாக்கியது. இதுபோல் முக்கிய பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ரியஸ் எஸ்டேட்

காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் சமூக விரோதிகள் பலர் ஊடுருவியுள்ளனர். இவர் கள் உரிய ஆவணங்கள் இல்லா மல் இடங்களை விற்பது, அப் பாவிகளை ஏமாற்றி மிரட்டி சொத் துக்களை வாங்குவது போன்ற செயல்களில் சாதாரணமாக ஈடு பட்டு வருகின்றனர். இதுவே காஞ்சிபுரத்தில் நடைபெறும் பல குற்ற நடவடிக்கைகளுக்கு மூலமாக அமைந்துள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல் மதுபானக் கடைகளுக்கு அருகே உள்ள மது அருந்தும் கூடங்களை ஏலம் எடுப்பதிலும் ரவுடிகள் ஆதிக்கம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவதற்காக பல்வேறு கூலிப் படையினர் காஞ்சிபுரத்தில் முகா மிட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். பல நேரங்களில் வழிப்பறி போன்ற திருட்டு வழக்குகளிலும் ஈடுபடுகின்றனர்.

இவைகளை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. போலீஸாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கூட்டு ஏற்படுவதை தடுக்க நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸார், தனிப்பிரிவு போலீஸார் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வட்டாரங்களைக் கேட்டபோது ‘அண்மையில் நடந்த 2 கொலை வழக்குகளில் குற்ற வாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக செயல் பட்டு வருகிறோம். காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து வருகின் cறனர். இமயம் ரவி கொலை வழக்கு அவர் அணிந்திருந்த நகைக்காக நடந்த கொலை. அதில் முன்விரோதம் இருப்பதாக தெரியவில்லை. தற்போது நடந்திருக்கும் இரு கொலைகளும் வேறுபட்டவை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x