

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும்.
மதிப்பெண் வாரியாக பட்டியல்:
மதிப்பெண் | எண்ணிக்கை |
481-க்கும் மேல் | 38,613 |
451 - 480 | 1,22,757 |
426 - 450 | 1,13,831 |
401 - 425 | 1,11,266 |
301 - 400 | 3,66,948 |
201 - 300 | 1,92,336 |
176 - 200 | 15,942 |
175-க்கும் கீழ் | 20,404 |