Published : 12 Jun 2016 11:43 AM
Last Updated : 12 Jun 2016 11:43 AM

கின்னஸ் சாதனைக்காக 40 மணி நேர தொடர் யோகாசனம்: சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது

மஹாயோகம் யோகப் பயிற்சி அமைப்பு சார்பில் கின்னஸ் சாத னைக்காக 40 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களை மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.

சர்வதேச யோக தினம் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மஹாமகரிஷி அறக் கட்டளை, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சி யில் போலீஸ் அகாடமி ஐஜி அம் ரேஷ் பூஜாரி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியா உலகுக்கு அளித்த பரிசு

அறிவியல், கணிதம், இலக்கி யம், வானியல், ஜோதிடம் என பல்வேறு துறைகளில் கண்டுபிடிப்பு களை உலகுக்கு தந்துள்ளது இந்தியா. அந்த கண்டுபிடிப்புகளில் யோகா உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா உலகுக்கு அளித்துள்ள பரிசு யோகா என்பது, நாம் பெருமைப்படக்கூடிய விஷய மாகும்.

முன்பு, விண்வெளிக்கு வீரர் களை நீண்ட காலத்துக்கு அனுப் பும்போது சில பிரச்சினைகள் இருந் தன. அவர்கள் உடற்பயிற்சி செய்ய நடைபயிற்சி இயந்திரங்களை (டிரெட் மில்) மட்டும் பயன்படுத்தி வந்தனர். பின்னர், புவி ஈர்ப்பு விசையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க யோகாதான் சிறந்த வழி என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துகொண்டனர். தற்போது அங்கு அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாட்டு மக் களும் யோகாவை ஏற்றுக்கொண் டுள்ளனர். இருப்பினும், யோகா உருவான நாடான இந்தியாவில் இன்னும் பெரும்பாலோனர் யோகா பயிற்சியை மேற்கொள்வதில்லை. எனவே, யோகா பயிற்சியை பல்வேறு நிலைகளில் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மஹாயோகம் அமைப்பின் பொறுப்பாளர் ரமேஷ் கூறும்போது, “மஹாயோகத்தில் பயற்சி பெற்ற 7 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் 600 ஆசனங்களை சுழற்சி முறையில் செய்து காண்பித்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பு ஏற்கெனவே 32 மணி நேரம் தொடர்ந்து யோகா சாதனை புரிந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது மஹாயோக அமைப்பு. இதனை முறியடித்து தொடர்ந்து 40 மணி நேரம் யோகா பயிற்சி செய்து செய்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளோம். யோகாவால் உடல் மற்றும் மன வலிமையை நிலைநாட்ட முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத் தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை சிறப்பு செயலர் பி.செந்தில்குமார், ஊர்க்காவல்படை ஐஜி பெரியய்யா, கல்பாக்கம் ‘பாவினி’ திட்டத்தின் தலைவர் கலோல்ராய், வழக்கறிஞர் கே.பி.ரஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x