

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் அரசுத் துறை யில் பணி வழங்கக் கோரி இன்று (7-ம் தேதி) போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணி யாளர்கள் சங்கத்தினர் கூறியதா வது: தமிழகம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இக் கடைகளில் பணிபுரிந்த 15 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வேலை யின்றி உள்ளனர்.
புதிய கடைகள் திறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே, மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்தவர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப, அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி யிடத்தில் பணியமர்த்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.