துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை மாவட்டத்தில் துப்புரவாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழில் எழுதப்படிக்க தெரிந்து முறையாக பள்ளியில் அடிப்படைக்கல்வி பயின்றதற்கான சான்று பெற்றுள்ளவர்கள் மட்டும் சென்னை-4, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொதுப்பிரிவு/ பொது/முன்னுரிமையற்றவர் இடஒதுக்கீட்டில் உள்ள துப்புரவாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான விண்ணப்பம் மற்றும் விபரங்களை சென்னை 4, சாந்தோம், எண்.56, ஜெயப்பிரகாஷ்நாராயண் மாளிகை இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) துணை இயக்குநரிடம் நேரடியாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை பெற்றுக்கொள்ளலாம்.

19.08.2016 மாலை 05.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) அழகு மீனா தெரிவித்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in