அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா?

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா?
Updated on
2 min read

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி அளிக்கும் நோக்கில் இலவச பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, புத்தகப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், காலணி, லேப் டாப், சைக்கிள் என 14 விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா பள்ளிகள் திறக்கப் பட்ட ஜூன் 6-ம் தேதி அன்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, முதல் நாள் அன்றே அனைத்து மாணவ-மாணவி களுக்கும் பாடப் புத்தகங்கள், சீரு டைகள் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கி மாணவ-மாணவிகளுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் படவில்லை. நோட்டுகள் வழங்கு வது தாமதமாகி வருவதால் பல பள்ளிகளில் தற்காலிக ஏற்பாடாக மாணவர்களை நோட்டுகள் வாங் கிக்கொள்ளுமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய நோட்டுகள் வாங்க முடியாத மாணவர்கள் குறைந்தபட்சம் பழைய நோட்டுகளையாவது வாங் கிக்கொள்ளுமாறும் இலவச நோட்டு கள் வழங்கப்பட்டதும் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என் றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இலவச நோட்டு கள் எப்போது வழங்கப்படும் என்பது பள்ளி தலைமை ஆசிரியர் களுக்குக் கூட சரியாகத் தெரிய வில்லை.

இலவசப் பாடப் புத்தகம், நோட்டு உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரும்பாலான நலத்திட்ட உதவி வழங்கும் பணி களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்தான் மேற்கொண்டு வருகிறது. இலவச நோட்டுப் புத்தகங்கள் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. நோட்டுகளின் எண்ணிக்கை வகுப்புக்கு வகுப்பு மாறுபடும். ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு 7 நோட்டுகளும், 3-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 10 நோட்டுகளும், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 8 நோட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டுரை நோட்டு, வரைபட நோட்டு ஆகியவையும் அடங்கும்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகத் தின் முன் அட்டையில் தமிழக அரசு முத்திரையுடன் முதல்வரின் படம் அச்சிடப்படுவது வழக்கம். தற்போது நோட்டு அட்டையில் முதல்வர் படம் அச்சிடும் பணியில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாகவே பள்ளி மாணவர்களுக்கு இன்னும் நோட்டுகள் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

காலதாமதத்துக்கு காரணம்

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் நோட்டுகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கான திட்டங் களுக்கு முன்கூட்டியே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டுவிடும். கடந்த 5 ஆண்டுகளும் இதன்படியே பணிகள் நடந்துவந்தன. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் சட்டப் பேரவை தேர்தல் வந்த காரணத்தால் அடுத்த முதல்வர் யார் என்ற தெரியாத நிலையில், மே 19-ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) வரை காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரே மாணவர்களுக்கான இலவச நோட்டுகள் அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. முன் அட்டையில் முதல்வரின் படத்துடன் நோட்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி முடிந்ததும் அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டுப் புத் தகங்கள் அனுப்பப்பட்டுவிடும்” என்றன.

இலவச நோட்டுகள் எப்போது வழங்கப்படும் என்பது பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குக் கூட சரியாகத் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in