பேக்கரும்பு நினைவிடத்தை சுற்றிய நிலங்களை ஆக்கிரமித்து அரசிடம் பேரம் நடத்தும் கலாமின் உறவினர்கள்: கலாமின் உதவியாளர் பொன்ராஜ் குற்றச்சாட்டு

பேக்கரும்பு நினைவிடத்தை சுற்றிய நிலங்களை ஆக்கிரமித்து அரசிடம் பேரம் நடத்தும் கலாமின் உறவினர்கள்: கலாமின் உதவியாளர் பொன்ராஜ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினை விடத்தைச் சுற்றிய நிலங்களை அவரது உறவினர்கள் ஆக்கிரமித் துக்கொண்டு அரசிடம் பேரம் நடத்துவதாக கலாமின் உதவி யாளர் பொன்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமேசுவரம் பேக்கரும்பில் கலாமுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கியுள்ளது. மேலும் நினைவிடம் கட்டும் பணி யில் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கிவருகிறது. கூடுதல் நிலம் கையகப்படுத்த காலம் தாழ்த்த மாட்டோம், என்று கடந்த வாரம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச் சர் மனோகர் பாரிக்கர் மாநிலங் களவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய்த்துறையினர் பேக் கரும்பு கலாம் நினைவிடத்தைச் சுற்றியுள்ள இடங்களை சர்வே செய்தனர்.

இந்நிலையில், பேக்கரும்பு கலாம் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது,

பேக்கரும்பு கலாம் நினை விடத்தைச் சுற்றியுள்ள நிலங்களை கலாம் சகோதரரின் உறவினர்கள் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கி வைத்துள்ளனர். இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 1.5 கோடி வீதம் அரசிடம் கேட்பதாக எனக்கு நம்பகமான தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இது கலாமின் சகோதரருக்கு தெரியாமல் கூட நடந்திருக்கலாம். எனவே கலாமின் சகோதரர் தமது உறவினர்களிடம் அறிவுறுத்தி, இந்த நிலங்களை மத்திய, மாநில அரசுகளிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். ஒப்படைக்க மறுக்கும்பட்சத்தில் அரசே அந்த இடத்தை கையகப்படுத்த வேண்டும். இல்லையென்றால், ஆக்கிரமிப்பாளர்களை கண் டறிந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in