

அரசு அலுவலகங்களில் ஜெய லலிதா படத்தை அகற்றுவதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா வின் படத்தை அகற்றாவிட்டால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவினர் அவ்வப் பொழுது தங்கள் மன அழுக்கை வெளிக்காட்ட, நாகரீகமற்ற பேச் சால், நாட்டுமக்களை வதைத்துக் கொண்டே இருப்பார்கள். முன்பு தந்தை செய்த வேலையை இப்போ தனயன் செய்து கொண்டிருக் கிறார்.
நாகரீகமில்லாமல் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக் கிறார். பொது வாழ்வில் நாணய மற்றவர்கள் என்று மக்களால் தூக்கி எறியப்பட்ட இவர்கள், தனக்கென வாழாது, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதிலே நிறைந்த ஜெயலலிதா பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
இதற்கு முன்பு, மக்கள் மனதிலே நீக்கமற நிறைந்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரையே நாகரீக மற்ற முறையில் விமர்சனம் செய்தவர்கள் தான் இவர்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது.
ஸ்டாலின், ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தியதால் தமிழ்நாடு, அம்மா நாடாகவே மாறி இருக்கிறது. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை அகற்றிவிட்டால், தமிழக மக்கள் மனதில் அவர்களை யாரா லும் எளிதில்அகற்றிவிட முடியாது.
உங்களிடம் நேர்மை இல்லை அதனால், ஆளத் தகுதியில்லை என்று, தமிழ்நாட்டு மக்கள் உங் களை ஆட்சியில் இருந்து அகற்றி, அப்புறப்படுத்திவிட்டார்கள். அந்த உண்மை நிலை தெரிந் திருந்தும் ஸ்டாலின் ஏன் இப்படிக் கூப்பாடு போடுகிறார் என்று தமிழக மக்கள் வேடிக்கையாகப் பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை அகற்ற முயன்றால், தமிழகத் தாய்மார்கள் ஆவேசமாக பொங்கி எழுவார்கள். உங்களை மன்னிக்கவே மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் இந்த வேலையை விட்டுவிட்டு, மக்க ளுக்கு உருப்படியானவேலை செய்ய மனமிருந்தால், அதைச் செய்ய முன் வாருங்கள்.