

நாகர்கோவிலில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் இருதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புகள், மதுரை, திருச்சி மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.
நாகர்கோவில், கோட்டாறு வாகையடி தெற்கு ரதவீதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். ஜவுளிக் கடை ஊழியர். இவரது மனைவி லதா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்களது மகன் அவினாஷ்(12), 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 18-ம் தேதி அவினாஷ் சைக்கிளில் சென்றபோது மோட் டார் சைக்கிள் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட அவினாஷ், மூளைச்சாவு அடைந்த தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே, அவினாஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அவினாஷ் கொண்டுவரப்பட்டார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் அவினாஷின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. சிறுநீரக சிகிச்சை நிபுணர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமையில், மருத்துவர்கள் ஆவு டையப்பன், டி.எம்.பூர்ணலிங்கம், கண்ணன், மெர்லின், கல்லீரல் நிபுணர் திருச்சி ராஜரத்தினம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை முரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சென்னைக்கு பயணம்
அவினாஷின் இதயம் சிறப்பு ஆம்புலன்ஸில் பகல் 2.27 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கு இருந்து விமானத்தில் 2.45 மணிக்கு சென்னை மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் திருச்சி சித்தார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கிட்னி கேர் மருத்துவ மனைக்கும், திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனைக்கு 2 கண்களும் எடுத்துச் செல்லப் பட்டு, அங்கு உள்ள நோயாளி களுக்கு உடனுக்குடன்அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப் பட்டன.