Published : 04 Oct 2013 12:10 PM
Last Updated : 04 Oct 2013 12:10 PM

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மருத்துவமனையில் பணியாற்ற கூடுதலாக 33 பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திருவண்ணாமலையில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உபயோகத்திற்காக ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் 25 கணிணிகளுடன் கூடிய நிர்வாகக் கூடம் அமைப்பதற்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும், உடல் இயங்கியல், உயிர் வேதியியல், நோயியல், நுண்ணுயிரியல் துறைகளுக்கான உபகரணங்கள் வாங்க 1 கோடியே 47 லட்சம் ரூபாயும், மருந்தியல், குற்ற ஆய்வியல், 2 சமூக மருத்துவம், குழந்தை மருத்துவ இயல், உள நோயியல், தோலியல், தொழுநோய், காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் துறைகளுக்கான உபகரணங்களுக்கு 3 கோடியே 90 லட்சம் ரூபாயும், அறுவை சிகிச்சை, எலும்பியல், நுண்கதிர் வீச்சு பகுப்பாய்வு, காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைகளுக்கான உபகரணங்களுக்கு 5 கோடியே 22 லட்சம் ரூபாயும், கண்சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் மற்றும் பெண் நோயியல், மயக்க மருந்து அறிவியல், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை, உடல் குறியியல், திசுவியல் துறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக 4 கோடி ரூபாயும் மற்றும் இதர செலவினங்கள் என மொத்தம் 16 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 116 Slice C.T.Scan with Fluoroscopy and Biopsy Robotic Stool என்ற நவீன நோய் கண்டுபிடிப்பு கருவி வாங்குவதற்கும், கோயம்புத்தூர்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் Extra Corporeal Shock wave Lithotripsy v என்ற நவீன நோய் கண்டுபிடிப்பு கருவி வாங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x