60 சதவீத நிலத்தடி நீர் 2025-ல் காலியாகும் அபாயம்: சுற்றுச்சூழல் மையத் தலைவர் தகவல்

60 சதவீத நிலத்தடி நீர் 2025-ல் காலியாகும் அபாயம்: சுற்றுச்சூழல் மையத் தலைவர் தகவல்
Updated on
1 min read

”வரும் 2025-ம் ஆண்டுக்குள் 60 சதவீத நிலத்தடி நீர் காலியாகும் அபாயம் உள்ளது” என்று, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத் தலைவர் ஏ.ஜி.முருகேசன் தெரிவித்தார்.

சர்வதேச நீர்வள நாளையொட்டி இக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

உலகில் 6-ல் ஒருவருக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்தியாவில் 170 மில்லியன் பேருக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 230 கன கி.மீ. நிலத்தடி நீர் உறிஞ் சப்படுகிறது. இது கிட்டத்தட்ட உலக அளவில் எடுக்கப்படும் தண்ணீரில் கால் மடங்காகும்.

இந்தியாவில் 78 சதவீதம் நிலத்தடிநீர், அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது.

2025-ம் ஆண்டில் 60 சதவீதம் நிலத்தடி நீர் காலியாகிவிடும் அபாயம் உள்ளது. இந்தியா வில் ஆண்டுதோறும் 37.7 மில்லியன் மக்கள், நீர் மூலம் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றுப்போக்கு நோயால் ஆண்டுக்கு 1.5 மில்லியன் குழந்தைகள் பலியாகின்றனர். எனவே அரிய பொக்கிஷமான தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். மழைநீரை வீணாக்காமல் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in