வணிகர்கள் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

வணிகர்கள் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்
Updated on
1 min read

பதிவு பெற்ற அனைத்து வணி கர்களும் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரை வில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதை முன் னிட்டு பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் தங்களது விவரங் களை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான வசதி விரைவில் முடிவடைய உள்ளது.

தமிழ்நாடு வணிகவரித் துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களது டிஜிட்டல் கையெழுத்து சான்றித ழுடன் (டிஎஸ்சி) விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிறுவனத் தின் உரிமையாளர், பங்குதாரர் என்றால் ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பம் இட்டு தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஜிஎஸ்டி இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள், டிஜிட்டல் கையெ ழுத்து சான்றிதழை மின் கையொப் பத்துடன் பதிவு செய்யவில்லை.

எனவே, அனைத்து வணி கர்களும் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழுடன் தங் களது விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in