

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை :
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா வில் தமிழர்கள் மீதும், தமிழர்க ளின் உடைமைகள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடந்து வருகிறது. வாகனங்கள் தீவைத்து கொளுத் தப்படுகின்றன. கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும் கைகோர்த் துக்கொண்டு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒருவார காலமாக தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அர சின் செயல்பாடு வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடக் காத வகையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தமிழகம் இன்றுவரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருக்கிறது. தமிழன் தமிழகத்தி லேயே மைனாரிட்டியாக இருக்கி றானோ என்ற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும். கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு சீரழிந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 144 தடை உத்தரவுக்குப் பிறகும் இத் தகைய பெரிய கலவரங்களும், பஸ் எரிப்புகளும் இன துவேஷத் தைத்தான் வளர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசு இதுவரை இந்த பிரச்சினையில் தலையிடாதது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துவ தோடு, 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியே தங்களைத் தாங்களே ஆண்டதுபோல, ஏன் எங்களை ஆண்டுகொள்ளக்கூடாது என்ற கேள்வியை விதைத்துவிடாதீர்கள். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையை சரிவர செய்து அமைதியை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.